2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ரம்போ வகை கத்தியுடன் உ/த மாணவன் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான மடிகணினிக்கான உபகரணங்கள் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தும் ரம்போ வகை கத்தி, கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கியுடன் கொழும்பில் பிரபல்யமான பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் ஒருவரை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவன் ரத்மலானை,தெஹிவளை மற்றும் கல்கிஸை போன்ற பகுதிகளில் இடம் பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயர்தரத்தில் பயில்வதற்கு தயாராகும் அவரை கைது செய்கின்றபோது அவரிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட ஆணுறைகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் விபசாரத்தில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X