2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் மீனவர்களின் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


உயிரிழந்த 3 மீனவர்களை  நினைவு கூர்ந்தும் இம்மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரியும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியும் நீர்கொழும்பில் நேற்று சனிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலாபம் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவர் அன்ரனி பெர்னாந்துவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்த மீனவர் யேசுமரிய கிங்ஸ்லிக்கும் இந்தியாவில் 3 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நீர்கொழும்பு மீனவத் தலைவர் கெனீஸியஸ் பெர்னாந்து ஆகியோரின் உருவப்படங்களுக்கு தீப அஞ்சலி செலுத்தப்பட்டன.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

அகில இலங்கை மீனவ தொழிலாளர் தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்ப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X