2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலையில் கைகலப்பு; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 04 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் வைத்தியசாலையின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிவடைந்துள்ளது. கைகலப்பில்  காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்  நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துவிட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் வைத்தியசாலைக்கு வந்தபோது  தனது மனைவியுடன் சண்டை பிடித்த நபரைக் கண்டு, தனது வாகனத்திலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து அந்த நபரை தாக்கியுள்ளார்.

இதன்போது இரும்புக் கம்பி வைத்தியசாலையின் தொலைபேசி இயக்குநர்; அறைக் கண்ணாடியில் பட்ட நிலையில் சேதமடைந்துள்ளது.

உடைந்த கண்ணாடித் துண்டு தொலைபேசி இயக்குநர் அறையிலிருந்த ஊழியரின் மூக்குக்கண்ணாடியை சேதப்படுத்தி அவருக்கு சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பொது உடைமைக்கு சேதம் விளைவித்தமை, பொது இடத்தில் கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X