2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சமயப் பாடசாலை மாணவர்களுக்கு புலமை பரிசில்

Kogilavani   / 2013 மார்ச் 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே. என்.முனாஷா


நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள சமயப் பாடசாலைகளில கற்கும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களும் சமயப் பாடசாலைகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மேயர் அன்ரனி ஜயவீர தலைமையில் நடைபெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபையின் மக்கள் அபிவிருத்திக் குழுவின் வழிகாட்டலில் மாநகர சபையின் நலன்புரி நிதியத்தினால் இந்த புலமைப் பரிசில்களும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.

மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரும் மக்கள் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, மாநகர சபை உறுப்பினர்களான வைத்தியர் என்ரி ரோஸரியோ, தயால் திலங்க மற்றும் சர்வமதத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் சர்வசமயங்களையும் சேர்ந்த 55 மாணவர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபா வீதம்; புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் 40 சமயப் பாடசாலைகளுக்கு அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையளின் அடிப்படையில் தலா 3500 ரூபா முதல் 7500 ரூபா வரையில் நிதியுதவி வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X