2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாரடைப்பு காரணமாகவே நீர்கொழும்பு சிறையில் கைதி மரணமடைந்துள்ளார்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மரணமான விளக்கமறியல் கைதி மாரடைப்பு காரணமாகவே இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட, பன்சில்கொட பிரதேசத்தைச் சேர்ந்த எக்.பி.விக்டர் (63 வயது) எனப்படும் கைதியே நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரணமடைந்தார்.

பிரேர பரிசோதனையை நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் ஆர்.என்.ஏ.எஸ்.ராஜபக்ஷ நடத்தினார். அந்த அறிக்கையிலேயே குறித்த கைதியின் மரணம் மாரடைப்பு காரணமாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணமடைந்த சந்தேக நபர் முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தாக்கி காயத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மினுவாங்கொட, பன்சில்கொட பிரதேசத்தில் விற்பனைக்காக பிரித்து வைக்கப்பட்டுள்ள காணியில் இருந்த பலா மரத்தில் நபர் ஒருவர் பலாக்காய் பறித்தமை தொடர்பாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவருக்கும் அந்த நபருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நபர் அயற் காணியில் வசிக்கும் எக்.பி.விக்டரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரிக்கச் சென்ற போது அவருக்கும் முன்னாள் கடற்படை வீரருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்படை வீரர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்தே குளிரூட்டப்பட்ட தனியார் போக்குவரத்து பஸ்கள் சிலவற்றின் உரிமையாளரான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந் நிலையிலேயே சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X