2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அறபு மத்ரஸாக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: அறபுக் கல்லூரிகள் ஒன்றியம்

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழு நாட்டிலும் குறிப்பிடப்பட்ட சில முற்போக்கு அமைப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் முடக்கப்படடு வரும் இந்த வேலையில்  மேலும் சில புதிய பிரச்சினைகளை உருவாக்க சிலர் முனைவதாகத் தெரிகிறது என அகில இலங்கை அறபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் றஹ்மானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அண்மைக் காலமாக அறபு மத்ரஸாக்களின் மீது சிலர் கண் வைத்துள்ளனர். அதாவது அரபு மத்ரஸாக்களில் பயங்கரவாதம கற்பிக்கப்படுவதாகவும் மாணவர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தூண்டுவதாகவும் பலர் பேச்சுக்கள், புத்தகங்கள் மூலம் பொய்ப் பிரச்;சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பொய்யான குற்றச்சாட்டுக்களை தாம் கண்டிப்பதாகவும் இதனையிட்டு தாம் வருத்தப்படுகின்றோம். மேலும் சில அமைப்புக்கள் தாம் பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு அறபு கல்லூரிகளின் தகவல்களைச சேகரிப்பதற்காக மத்ரஸாக்கள் தோறும் சென்று வருகின்றனர்.

அத்துடன் கல்லூரிக்கு எங்கிருற்து பணம் வருகிறது? வெளிநாட்டு உதவிகள் இருக்கின்றனவா? என பல முக்கிய கேள்ளிகளையும் கேட்கின்றனர்.  ஆனால் இவர்கள் எமது நாட்டு உளவுத்துறை அதிகாரிகளாக 
தெரியவில்லை என பல அறபுக் கல்லூரிகளிலிருந்து தமக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்;துள்ளன.

ஆகவே எந்த அறபுக் கல்லூரிகளுக்கு எவர் வந்;தாலும் வருபவரின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எந்தவொரு தகவல்களையும் எவரும் வழங்கக்கூடாது. எந்தவொரு தகவல் பெறவும் கல்லூரி முகவரியிடப்பட்டு எழுத்து மூலம்  வேண்டுகோள் விடுக்கும் பட்சத்திலே ஆலோசனைகள் செய்யப்பட்டு எக்காரியத்தையும் மேற்கொள்ள வேண்டும் என நாடு முழுதிலுமுள்ள அறபுக் கல்;லூரிகளை தாம் வேண்டிக்கொள்கின்றோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X