2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சவூதி உதவியில் காலியில் கப்பல் கட்டும் நிலையம்

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான இரண்டாவது நிலையம் சவூதி அரேபியாவின் முதலீட்டுடன் காலி துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கிறது.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பிலுள்ள துறைமுக அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு முதற்கட்டமாக நாற்பத்து நான்கு அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1500க்கு
மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் கப்பல் கட்டுதல், திருத்துதல் தொடர்பான இரண்டாவது நிலையத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், சவூதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள ஹாதி ஹமட் அல் ஹம்மாம் நிறுவனத்தின் தலைவர் ஹாதி ஹமட் அல் ஹம்மாமும் துறைமுக மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் ரோஹித அபேவர்தன, துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர் பியத் பி விக்கிரமவும் இத்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஹால் கெப்பட்டிப்பொலவும் கைச்சாத்திட்டனர்.

மேலும், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே நட்புறவு உள்ளது. இலங்கை சவூதி அரேபியாவின் சிநேக நாடு என்றாலும் இவ்வாறான பாரிய முதலீடு இலங்கைக்கே வருவது இதுவே முதல் தடவையாகும். இரண்டாம் கட்டத்தின் போது 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இதன்மூலம் 5000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலை தீவின் கப்பல் கட்டுதல் மற்றும் திருத்தும் நடவடிக்கைகளை இலக்காக கொண்டே இம்முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வைபவத்தில் நிறுவனத்தின் சர்வதேச செயற்பாடுகளின் பொறுப்பாளர் பி.கே.ராஜ்கோபால், வர்த்தக மேம்பாட்டு முகாமையாளர் டி.புருஷோத்தமன், சி கல்ப் சியாட் தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் நடவடிக்கைப் பொறுப்பாளர் கலாநிதி சரத் ஒபய சேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.



  Comments - 0

  • thonee Friday, 07 June 2013 01:47 PM

    சவுதியின் பொருளாதார வளங்களை அரசுக்கு பெற்றுக்கொடுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு எதுவும் கிடைக்காது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X