2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டனர்

Kanagaraj   / 2013 ஜூன் 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட்.ஷாஜஹான்


புயலில் சிக்கியதில் படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

நீர்கொழும்பை சேர்ந்த அன்ரன் ராஜமணி (33 வயது) மற்றும் மனோஜ் (31 வயது) ஆகியோரே காப்பாற்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் 18 அடி நீளமான படகில் கடலுக்கு சென்றுள்ளனர். கரையிலிருந்து 5 கடல் மைல் தூரம் பயணித்த நிலையில் இரவு 1 மணியளவில் புயல்  காற்று வீசியுள்ளது.

புயலில் படகு  கவிழ்ந்துள்ளது. பாதுகாப்பு ஜாக்கட் அணிந்திருந்மையினால் இருவரும் கவிழ்ந்த படகினை பிடித்தவாறு கரையை நோக்கி தத்தளித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதற்கிடையில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் இவர்களை கண்டு காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X