2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முன்னாள் மரதன் ஓட்ட வீரர் உட்பட மூவர் கைது

Kanagaraj   / 2013 ஜூன் 20 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - எம்.இஸட்.ஷாஜஹான்

தங்கப்பதக்கம் வென்ற முன்னாள்  மரதன் ஓட்ட வீரர் உட்பட மூவரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

திருட்டு குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இந்த மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவீன வீடுகளை நிர்மாணிக்கும் கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வீடுகளை கட்ட பயன்;படுத்தும் பொருட்களை இவர்கள் திருடி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 திம்பிரிகஸ்கட்டுவ, கேசித்த சில்வாபுர பிரதேசத்ததை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர் . இவர்கள் மூவரும் போதைப் பொருள் பாவிப்பவர்கள் எனவும் திருமணமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நவீன வீடுகளை நிர்மானிக்கும் பொறுப்பை  ஏற்று மேசன் , தச்சன்  ஆகிய வேலைகளை செய்யும் சந்தேக நபர்கள், அந்த வீடுகளில் உள்ள தண்ணீர இறைக்கும் இயந்திரம்.டைல்ஸ், தேக்கை பலகை, சரணில்  உட்பட சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

திம்பிரிகஸ்கட்டுவ, கதிரானை, தளுபத்தை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளிலேயே இவர்கள் இந்த திருட்டுச் செயலை புரிந்துள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவை சேரந்த பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X