2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலையில் நான்கு மாத கர்ப்பிணி மரணம்

A.P.Mathan   / 2013 ஜூன் 23 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்  
 
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார்.
 
சீதுவை, கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான கயானி குணசிரி என்பவரே மரணமானவராவார்.
 
குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சீதுவை விஜயகுமாரணதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தினங்களின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
 
இவர் மரணமடையும் போது நியுமோனியா காய்ச்சலில் பீடிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .