2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கண்ணாடி இருந்தால் கவனம்: பெண்களுக்கு எச்சரிக்கை

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டிற்குள் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தால் அவ்வாறான முச்சக்கரவண்டிகளில் பெண்களை பயணிக்கவேண்டாமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்துகம பிரதான பொலிஸ் அதிகாரியான பீ.லுலோவைக்கேவே மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.

முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கு பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கண்ணாடி பொருத்தப்பட்ட 19 முச்சக்கரவண்டிகளை தாம் மத்துகம பகுதியில் கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பக்கவாட்டு கண்ணாடிகள் இரண்டும் நடுவில் ஒரு கண்ணாடி இருப்பது மட்டும் போதுமென்றும் பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  Comments - 0

  • ரா.ப.அரூஸ் Friday, 28 June 2013 10:50 AM

    எப்பொழுதுதான் அங்கங்கள் தெரியும் படியாகப் பெண்கள் ஆடை அணிவதைத் தவிர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற முதிர்ச்சியும் தைரியமும் இந்தப் பொலிஸாருக்கும் ஊடகங்களுக்கும் நீதிமன்றத்திற்கும் வரப்போகிறதோ தெரியவில்லை..! இறைவன்தான் எம் தேசத்தின் கலாசாரத்தைக் காக்கவேண்டும்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X