2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலவச யூனானி மருத்துவ முகாம்

Super User   / 2013 ஜூலை 01 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலவச யூனானி மருத்துவ முகாமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, பெரிய முல்லை அல் - ஹிலால் மத்திய கல்லூரியிலேயே இந்த இலவச யூனானி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

யூனானி மருத்துவ மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மருத்துவ முகாமில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஹிஜாமா, நீரழிவு பரிசோதனை, சிறுவர் நல சிகிச்சை, வெண் நோயியல் சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் போன்றவற்றிக்காக இந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

யூனானி மருத்துவ மாணவர் சங்கத்தினால் இது போன்ற இலவச யூனானி மருத்துவ முகாம் வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X