2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 03 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்     

முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததில் பாடசாலை மாணவியொருவர் மரணமடைந்துள்ளார்.

பில்லவத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றது. 

லொறியொன்றிலிருந்து விழுந்த மரக்கறி மூடை மீது வீதியால் சென்றுகொண்டிருந்த இம்முச்சக்கரவண்டி ஏறியதில்; முச்சக்கரவண்டி குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு போலவலான மாவத்தையைச் சேர்ந்த வி.இருணி மோச்சா தேவின்ரி (வயது 5) என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இம்மாணவி நீர்கொழும்பு போலவலான நிமலமரியா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி பயின்று வருகின்றார்.

தனது  மாமனாருடனும் தனது 9 வயதுடைய சகோதரியுடனும் மினுவாங்கொடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே இவ்விபத்து இடம்பெற்றது.

முச்சக்கரவண்டியை செலுத்திவந்த மாமனாரும் உடன் பயணித்த இச்சிறுமியின் சகோதரியும் உயிர் தப்பியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X