2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மேயர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2013 ஜூலை 10 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்       

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு  பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க முன்னிலையில் அவரை ஆஜர்படுத்திய போதே தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு சரீரப்பிணைகளிலும் பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு கடமையை செய்யவிடாது இடையூறு செய்தமை, சிறிய காயம் ஏற்படுத்தியமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்கள் மேயர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக நேற்றிரவு மேயர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளது.

இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து மேயர் வாகனத்திலிருந்து இறங்கி பொலிஸ் உத்தியோகத்தரின் சேர்ட் காலரினை பிடித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து  மேயர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X