2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

George   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு கடற்கரை வீதி, கடற்கரையோர பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(13) மீட்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியமுல்ல, அபேசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து உஷாந்த என்ற (வயது 20) இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மரணமடைந்த இளைஞரின் சகோதர முறையான ஒருவர், திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில், தனது சகோதரர் பணம் வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்  அவர் சாட்சியம் அளிக்கையிலகூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார், ஏத்துக்கால சுற்றலாத்துறை பொலிஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X