2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மருமகனின் கத்திக்குத்தில் மாமனார் பலி

Thipaan   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜகான்

குடிபோதையில்  தனது மனைவியின்  தாயாரை துன்புறுத்தி வந்த மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கட்டானை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கட்டானை, கோங்கொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ராமசாமிலாகே மாரிமுத்து  (52 வயது) என்பவரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக  கட்டானை, கோங்கொடமுல்ல பிரதேசத்தைச் சேர்;ந்த சமன்த குமார  (28 வயது) என்பவரை கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் தினமும் மது அருந்தி வந்து தனது மனைவியை (மாமியார்) அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று அதேபோன்று துன்புறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து சந்தேக நபரான மருமகன்  மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தனது மனைவியிடம்  வந்து, 'இனிமேல் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்' என்று  கூறியுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X