2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

4 விபத்துக்களில் ஒருவர் பலி: 10 பேர் காயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரனை மற்றும் பண்டாரகம ஆகிய இடங்களில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் ஒருவர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய்,தந்தை மற்றும் மகள் ஆகியோரே காயமடைந்துள்ளர். இரத்மலானையிலுள்ள விஹாரைக்கு சென்று திரும்பும் போதே இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே இராணுவ டிரக்வண்டியில் மோதுண்டு அந்த மூவரும் காயமடைந்துள்ளனர்.

இரவு 12 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவேண்டாம் என்று விஹாரையில் இருந்தவர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே அவர்கள் நேரம் தாமதித்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் கைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே பிரதேசத்தில் இடம்பெற்ற ஏனை மூன்று சிறுசிறு விபத்துக்களில் ஏழுபேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X