2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

65 வயதான பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்

Super User   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட நபர் ஒருவர் 65 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.

கொம்பனித்தெருவிலுள்ள பொதுக்கழிவறை ஒன்றில் வைத்து இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்படும் இந்நபரை ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ண நேற்று உத்தரவிட்டார்.
மேற்படி நபர் பல குற்றங்களை புரிந்தமையால் தொடர் குற்றவாளியாக (ஐ.ஆர்.சி) பதவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நபர் ஏப்ரல் 23 ஆம் திகதி இரவு பொதுக்கழிவறை ஒன்றில்வைத்து, தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 65 வயதான மேற்படி பெண் குற்றம்சுமத்தியுள்ளார்.

அப்பெண்ணின் கூக்குரல்கேட்டு, திரண்ட அயலவர்கள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X