Super User / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
வயோதிபர் விடுதியிலிருந்த 85 வயதான பெண்ணிடம் போலியாக பாசம் காட்டி, 11.5 மில்லியன் ரூபா மோசடி செய்த தம்பதியொன்றை செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஷீலா செனவிரட்ன எனும் இவ்வயோதிபப் பெண் இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தார்.
தான் கொள்ளுபிட்டியிலுள்ள வயோதிபர் விடுதியிலிருந்தபோது, பிரதான சந்தேக நபரான கே.டினேல்கா எம். பெர்னாண்டோ தன்னுடன் நட்பாகியதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான பெண்ணுக்கு திருமணமானவுடன் புதிதாக திருமணம் செய்த இத்தம்பதியினர் தங்களுடன் வாடகை வீடொன்றில் வந்து தங்குமாறு தன்னை அழைத்ததாகவும் ஆனால் ஜூலை மாதத்திலிருந்து அவ்வீட்டுக்கு தான் வாடகைசெலுத்த நேர்ந்ததாகவும் அதேவேளை தனது 39 நிரந்தர வைப்புச் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றையும் சந்தேக நபரை தான் நம்பியதால் அவரிடம் ஒப்படைத்திருந்ததாக வயோதிபப் பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் அத்துருகிரிய பிரதேசத்தில் 2.51 மில்லியன் ரூபா பெறுமதியான காணியொன்றை வாங்குமாறு இத்தம்பதியினர் தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதன்பின் காணியொன்றையும் 3.65 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றையும் வாங்குவதற்கு நிதி ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பிரதான சந்தேக நபர் இதேகாலப் பகுதியில் 2 மில்லியன் ரூபாவை தனது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் அவரின் கணவரான மஹேஸ் பெரேரா 3 மில்லியன் ரூபாவையும் வைப்பிலிட்டமையும் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதவான் லங்கா ஜயரட்ன சந்தேக நபர்களை செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago