Editorial / 2022 ஜனவரி 05 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞன், டிக் டொக் (TIK TOK) சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மாணவர்கள் மூவர் உட்பட, அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், நேற்று (04) இவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.
ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் ஜனவர் 3ஆம் திகதி சென்றுள்ளார்.
அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு தரப்பினர், டிக் டொக் வீடியோ தொடர்பில் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவ்விளைஞனின் அடிவயிற்றில் குத்தியுள்ளனர்.
அதன்பின்னர், அங்கிருந்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என தெரிவித்த கிராண்ட்பாஸ் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையிலேயே மேற்படி அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025