Super User / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவும் முஸ்லிம் சமய விவகார திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஹஜ் கருத்தரங்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு - 07 தர்மபால மாவத்தையில் உள்ள ஜே.ஆர்.ஜயவர்தன கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
"ஹஜ்ஜும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியும்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த முழு நாள் கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் விளக்க உரைகளை வழங்கவுள்ளனர்.
காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கினை
ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பொளஸி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இக்கருத்தரங்களில் ஹஜ் முகவர்கள், இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் ஆர்வலர்களும் பங்கேற்கலாம் என ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவு தெரிவித்ததது.
ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவும் முஸ்லிம் சமய விவகார திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த கருத்தரங்கு மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 011-4942267 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முஹம்மட் ஸியாடை ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொண்டு விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு ஈரான் தூதரகத்தின் கலாசார பிரிவு கேட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago