Princiya Dixci / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 10, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் புதிய நான்கு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல், இன்று வியாழக்கிழமை (01) காலை 8.30க்கு நாட்டி வைக்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்தின் கீழ் இக்கட்டடம் அமையப்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப் பிரிய, உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா, மேல்மாகாணக் கல்வி, கலை, கலாசார, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச மற்றும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago