2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

அண்ணன் இறந்த அதிர்ச்சி: தங்கையும் உயிரிழந்தார்

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் மரணமடைந்தார்.

மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி அகம்பொடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் திரு.சுனேத் சாந்தவின் பணிப்புரைக்கமைய, திரு.உபந்த டி சில்வாவின் முயற்சியின் கீழ், பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சார்ஜன்ட் எஸ்.ஏ.ஆர்.கே. டி சில்வா (55318) ஆகியோர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .