Sudharshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு கல்வி வலயத்துக்குட்பட்ட இறாகமை, பட்டுவத்தை வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி, நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்துக்கு முன்பாக பெற்றோர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கத்தில் வீழ்ச்சி, நிதி மோசடி என்பன காணப்படுவதாகவும் இதற்கு அதிபரின் நிர்வாக செயற்பாடுகளே காரணம் என தெரிவித்தே இந்ந ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நீர்கொழும்பு கல்வி வலய அதிகாரிகளை மேற்படி பாடசாலைக்கு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்த போதிலும், அதிகாரிகள் வருகை தரவில்லை. இதனையடுத்தே, வலய கல்வி அலுவலகத்தின் முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி அதிபர் குறித்து வலய கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தோம். ஆர்ப்பாட்டத்தை அடுத்து நீர்கொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதிபரை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டங்களை மேற்கொள்ள தெரிவித்தனர்.
6 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
4 hours ago