2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் மாற்றம்

Gavitha   / 2016 மார்ச் 28 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இலத்திரனியல் கட்டண அறவீட்டு முறைக்காக வாகனங்களை பதிவுசெய்வதற்கான ஊக்குவிப்பு வாரம் இன்று திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகின்றது.

1,000 ரூபாய் தொகையை செலுத்தி பதிவுசெய்யமுடிவதுடன், இந்த வாரத்தில் பதிவு செய்பவர்களுக்கு 10சதவீத பயண கட்டண மற்றும் இலவச அனுமதி சீட்டு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தவிர, பதிவு செய்வதற்கு செலுத்தப்படும் 1,000 ரூபாயை அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணமாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கழித்துக் கொள்ள முடியும்.

இன்று முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை இந்த பதிவு செய்யும் நடவடிக்கை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணம் அறவிடும் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள காரியாலயத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X