Freelancer / 2022 மார்ச் 08 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜி கபில
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 அந்தூரியன் கன்றுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர் நேற்று (07) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வனவிலங்குகள் மற்றும் தாவரவியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து நேற்று (07) மாலை 4 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 405 என்ற விமானம் மூலம் நாட்டுக்கு வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வைத்திருந்த பெரிய அளவிலான பயணப் பையிலேயே, இந்த அந்தூரியன் கன்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக தாவர தனிமைப்படுத்தல் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025