2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அரச வங்கிக் கொள்ளை முயற்சி: தோல்வியில் முடிந்தது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தேகொட பகுதியிலுள்ள அரச வங்கியொன்றின் 4 கதவுகளைஉடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட முயன்ற முயற்சியொன்று தோல்வியில் முடிவடைந்த சம்பவமொன்று, நேற்று திங்கட்கிழமை (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 

வங்கியின் பின்புறக் கதவின் மூலம் உள்நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த மேலும் நான்கு கதவுகளை உடைத்துள்ளபோதும் அவர்களால் அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது போனதால் முயற்சியைக் கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில், அண்மைக்காலமாக வங்கிக் கொள்ளைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X