Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
அளுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயசம்பத் ரணசிங்கவின் ஆலோசனைக்கமைய, தர்கா நகர் பொதுச் சந்தை அருகே இன உறவைக் கட்டியெழுப்பும் வகையில், இப்தார் நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், அளுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
அளுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயசம்பத் ரணசிங்க இந்நிகழ்வில் உரையாற்றும் போது,
“அளுத்கமை சம்பவத்துக்கு 3 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில் பிரதேசத்தில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு, ஒற்றுமையாக வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
“தர்கா நகரிலுள்ள பள்ளிவாசல்கள், நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் 51 பேரை ஓரிடத்துக்கு அழைத்து? நான் வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையிட்டு நன்றி தெரிவிக்கின்றேன்.
“பிரதேச முஸ்லிம்கள் எவ்வித பிரச்சினைகளிலும் ஈடுபடாது எதிர்காலத்தில் தமது சமயக் கடமைகளை செய்து கொண்டு நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும். நாம் எங்கும் ஒற்றுமையாக வாழ்ந்து ஏனைய பகுதிக்கு முன்மாதிரி காட்டுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago