Freelancer / 2022 மே 26 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் ஞாயிறு தினமான 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகள் இருவரின் தந்தையும் கோடீஸ்வர வியாபாரியுமான மொஹமட் இப்ராஹிம் மற்றும் மொஹமட் ஹிஸாஸ் ஆகிய பிரதிவாதிளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, நேற்று (25) பிணையில் விடுலை செய்தார்.

மொஹமட் இப்ராஹிம் என்ற பிரதிவாதி, கொழும்பு சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஆகிய சொகுசு ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் ஆகியோரின் தந்தையாவார்.
தலா இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும், பிரதிவாதிகள் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிபதி, ஒவ்வொரு மாதத்தின் ஆரம்ப மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆஜராக வேண்டும் என்றும் பிரதிவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.
பிரதிவாதிகள் இருவரும் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றும் அவர்களின் உடல்நிலை உட்பட விசேட காரணங்களைக் கருத்திற் கொண்ட நீதிபதி, பிணை உத்தரவைப் பிறப்பித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திருந்தும் பொலிஸாரிடம் அதை மறைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
53 minute ago
3 hours ago
3 hours ago