2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இரத்தினக்கல் அகழ்வுக்கு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு இடமளிக்கப்படாது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன். எந்தவொரு வெளிநாட்டுக் கம்பனிக்கும் நாட்டில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது. அது எனது தேர்தல் வாக்குறுதியாகும் என ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்தார். 

இலங்கை இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத்தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான கலந்துரையால், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (23) பிற்பகல் நடைபெற்றது. 

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் கனிமத்தொழிலாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இரத்தினக்கல் அகழ்வின்போது இரத்தினக்கற்களை பிரித்தறிவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய இயந்திரம் தொடர்பிலும் இங்கு ஜனாதிபதிக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வேறுபடுத்தப்பட்ட இரத்தினக்கற்களும் ஜனாதிபதியின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டதோடு, இவ்வியந்திரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்த தேவையான உதவிகளைப் பெற்றுத்தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இப்புதிய கண்டுபிடிப்பு தொடர்பில் முழுமையான ஒரு அறிக்கையையும் இத்தொழில்துறையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வரும் ஜனவரி அரையிறுதிப் பகுதியில் தமக்கு அறிக்கை வழங்குமாறும் ஜனாதிபதி அப்பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X