2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இலங்கை பரீட்சை திணைக்களம் அபிவிருத்தி

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்     

கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடின் மூலம் இலங்கை பரீட்சை  திணைக்களம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக 300 பரீட்சார்த்திகள் ஒரே இடத்தில் பரீட்சை திணைக்களத்திலே இருந்து பரீட்சை எழுதவும் பயிற்சிகள் பெறவும் கூடிய வகையில் புதிய மண்டபம் ஒன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் றி.அ பந்துசேன, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பிரதம பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார, தேசிய கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் நானயகார மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துக் கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X