Gavitha / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின் முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி Siva Mahasandana உள்ளிட்ட முன்னணி அதிகாரிகள் சிலர், நேற்று செவ்வாய்க்கிழமை (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.
இதன்போதே, குறித்த குழுவினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இலங்கை இன்று அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக பாராட்டிய அவர்கள், இலங்கை இன்று முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாடு என்றும் எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல முதலீடுகளை செய்வதற்கு தமது நிறுவனம் விருப்பத்தோடு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இலங்கையில் நிலவும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி, இதன்போது தூதுக் குழுவினருக்கு விரிவாக விளக்கியிருந்தார்.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025