Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 08 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இளையோர், அபிவிருத்தியைத் துரிதப்படுத்திடுவதன் மூலம், நாட்டை அபிவிருத்தி செய்யலாம். இதனால், இளையோரை மையப்படுத்திய ஒரு நாட்டை உருவாக்குவதற்கான இலக்கை அடையலாம்” என, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
இளைஞர் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தொடர்பான இரு நாட்கள் உரையாடல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“உலகில் 60 சதவீமான இளைஞர்கள், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ளனர். இலங்கையில் சனத்தொகையில் 23.2 சதவீதமானோர், இளைஞராவர். சமூகப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவின் ஊடாக, தமது எதிர்காலம் குறித்த பொறுப்பை, இளைஞர்கள் எடுக்க முடியும். அத்துடன், தமது சமுதாயங்களில் தாக்கத்தையும் கொண்டிருக்க முடியும்.
“யு.என்.டி.பி ஆசிய பசுபிக்கால் அறிமுகப்படுத்தப்பட்ட இளைஞர் உரையாடல் நிகழ்ச்சியானது, 15 நாடுகளில் சமூக மாற்றத்துக்கான வழிகாட்டியாக, இளம் தொழில்முனைவோரின் வகிபாகத்தை முன்னிறுத்துவதற்கு, தற்போது இளைஞர்களை, அரசாங்கங்களை, தனியார் துறையை ஒன்றாக கொண்டு வருகின்றது” என்றார்.
இதில் கலந்துகொண்டு இளைஞர் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் யு.என்.டி.பியின் பணி தொடர்பில் உரையாற்றிய யு.என்.டி.பி இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் ஜோர்ன் சொரென்சன்,
“யு.என்.டி.பி என்ற வகையில், இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி நிரலில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது அபிவிருத்திப் பணியின் மையமாக, இளைஞர்கள் உள்ளனர். இளைஞர் தலைமுறையை வலுப்படுத்துவதில், கடந்த வருடங்களில் நாம் பிரதான பங்காளராக இருந்துள்ளோம். யு.என்.டி.பி தலைமையிலான நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக, பரந்த ஐ.நா முறைமைக்குள் மாற்றத்தின் நிலைமாற்று செயற்பாட்டாளர்களாக, இளம் பெண்களையும், ஆண்களையும் ஈடுபடுத்துவதற்கு நாம் பணியாற்றுகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago