Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 26 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு உணவு கொடுக்க தாமதமானதால், ஆத்திரம் கொண்ட மகன், தனது தாயைக் கொலை செய்த சம்பவம் ஒன்று, வெலிகம -படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
75 வயதுடைய தாயொருவரே, இவ்வாறு தனது மகனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான இன்றுக் காலை, குறித்த பெண், காலை உணவைத் தயாரிக்க சில மணிநேரம் தாமதமாகியுள்ளது. தயாரிக்கப்பட்ட உணவை தனது மகனுக்குக் கொடுத்தபோது, ஆத்திரம் கொண்ட மகன், தனது தாயை, தடியொன்றினால் தாக்கிக் கொலைசெய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த வெலிகம பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
கொலை செய்த நபர், 42 வயது நிரம்பியவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் நீண்டகாலமாக அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
40 minute ago
42 minute ago