Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில், அதன் தரம் மற்றும் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு மற்றும் யோசனைகள், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது என, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.
நேற்று (24), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, உராய்வு நீக்கி எண்ணெயை பயன்படுத்தும் பாவனையாளர்களின் நலன் மற்றும் அவர்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்காக கொள்கை ரீதியாக, பல ஆலோசனைகளையும் தயாரிக்க வேண்டி உள்ளது.
“கடந்த மார்ச் மாதம் முதல், உராய்வு நீக்கி எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக, எழுத்து மூலமாக, எமது ஆணைக்குழு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து, இன்று (24) பொதுமக்களிடம் கருத்துக்களை வாய்மொழி மூலமாக கேட்டறிந்து கொண்டது. இதன்போது சுமார் 300க்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
“அடுத்த மாதம் 15ஆம் திகதி, ஆணைக்குழு உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில், அதன் தரம் மற்றும் விலை தொடர்பான பிரதிபலிப்பை வெளியிடவுள்ளது அதனைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகள், எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago