Editorial / 2019 பெப்ரவரி 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப் பொருள் பற்றியும் போதைப் பொருள் வர்த்தகர்கள் தொடர்பாகவும் ஊடகங்கள் தேவையற்ற பிரசாரங்களை வழங்குவதாக போதைப் பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த கித்தலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் போன்ற உயர் அதிகாரம் கொண்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போதைப் பொருட்களின் பெயரை பகிரங்கமாக குறிப்பிடுவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாகும் என்றும் டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் பற்றி, ஊடகங்கள் அநாவசிய பிரசாரங்களை வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
போதைப் பொருள் வர்த்தகம் பற்றி, ஊடகங்கள் அநாவசியமான முறையில் பாரிய பிரசாரங்களை வழங்குவது, நாட்டுக்கு பொருத்தமற்றதென், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்தார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago