Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மார்ச் 17 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, எரிபொருள் வரிசையில் நிற்போருக்கும் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயும் வாக்குவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில், வரிசையில் நின்ற ஒருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில், கெஸ்பேவ - பண்டாரகம வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகேயும் நேற்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல மணிநேரம் வரிசையில் நின்றிருந்த நுகர்வோர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
டீசல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறியதாக தெரியவந்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், முற்றி கைகலப்பாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வந்து மோதலை சமரசம் செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
தேவையான எரிபொருளைப் பெறுவதற்காக பல நுகர்வோர் எரிபொருள் கேன்களுடன் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
பொதுமக்களுக்கு கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதை தவிர்க்குமாறு அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றுமு உத்தரவு பிறப்பித்த போதிலும் மக்கள் கேன்களுடன் காத்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago