Freelancer / 2023 ஜனவரி 23 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சி.வை.பி. ராம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கட்சியின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் தன்னால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள்கூட வெட்டப்பட்டுள்ளன. எனவே, இது சம்பந்தமாக கட்சி தலைமைப்பீடம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ராம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முஜிபூர் ரஹ்மானும், கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதற்கு பொறுப்புகூற வேண்டும் எனவும் ராம் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினர்கள் பலர் இருக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் பின்னணி என்னவென கேள்வி எழுப்பியுள்ள ராம், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வாய்ப்பளிக்க தான் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.
28 minute ago
29 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
39 minute ago
1 hours ago