2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஐஸ்கிரீம் விவகாரம்: அரசியல்வாதி சரண்

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவனொருவன் வைத்திருந்த ஐஸ்கிரீமானது, தன்னுடைய உடலில் பட்டமையால் ஆத்திரமடைந்து அச்சிறுவனை தாக்கியதாக கூறப்படும், கடுவளை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அருண லக்மால் விலன்கம, கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் சரணடைந்தார்.

கடந்த 20ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸாரினால் அவர் தேடப்பட்டு வந்தநிலையியே அவர் சரணடைந்துள்ளார்.

அரசியல்வாதியின் தாக்குதலால் பாதிப்படைந்த  11 வயது சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

கடுவெல விலத்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியே, தனது மகனை தாக்கியதாக  சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X