Kogilavani / 2017 மார்ச் 26 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜகிரிய – வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
மேலும், வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹெரோய்ன் 140 மில்லி கிராம், கஞ்சா 10 கிராம், சட்டவிரோத மதுபான போத்தல்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 15 பேருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 300 வீடுகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.
சுமார் 140 வாகனங்கள், சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago