2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

காசாளரை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் கும்பல் கைது

Niroshini   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

வர்த்தக நிலையங்களில் காசாளரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க திட்டமிட்ட மூவரை நீர்கொழும்பு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(12) கைதுசெய்துள்ளனர்.  

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த  மொஹமட் மிஹிலான் (வயது 33), அப்துல் ரஹுமான் (வயது 30 ), வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த  பிரதான சந்தேக நபரான மொஹமட் அமீன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நீண்ட காலமாக நாட்டின்  பல பிரதேசங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று  அந்த வர்த்தக நிலையங்களிலுள்ள காசாளர்களை ஏமாற்றி,  பணத்தை  பெற்றுவந்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு சென்ற சந்தேக நபர்கள் அங்கு 600 ரூபாய் பெறுமதியான  அழகு சாதனப் பொருளொன்றை கொள்வனவு செய்து விட்டு, காசாளரிடம் 5,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். 

5,000 ஆயிரம் ரூபா பணத்தை மாற்றி கொடுப்பதற்கு தங்களிடம் பணம் இல்லை என காசாளர்  தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையத்திற்கு தேவையான அளவு  பணத்தை தாங்கள் மாற்றித் தருவதாகக் கூறி சந்தேக நபர்கள் காசாளரை ஏமாற்றி அந்த வர்த்தக நிலையத்திலிருந்து  தாங்கள் கொடுத்த  பணத்துக்கு அதிகமான  தொகையை பெற்றுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X