2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கூடுதலான உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கடந்த ஆண்டுகளைவிட கூடுதலான உதவிகளை எதிர்வரும் 03 ஆண்டுகளுக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் தெக்கெஹிக்கே நக்கஉ (Takehiko Nakao) தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கயின் தலைவர், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்க்கிழமை (23) முற்பகல சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். 

இலங்கையின் கல்வி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளின் மேம்பாட்டுக்காக விசேட உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த தலைவர், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக விசேட உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார். 

அவ்வாறே இலங்கையை இன்று புதிய முதலீடுகளுக்கான சிறந்த மத்திய நிலையமாகத் தான் காண்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலத்தில் ஒரு சில கருத்திட்டங்கள் முறையான திட்டமிடலின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக அதன் நன்மைகள் ஒரு சில பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

ஆயினும், புதிய அரசு குறுகியகாலத் துறை மற்றும் நீண்டகால துறை ஆகிய இரண்டு துறைகளிலும்  நாட்டின் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு இத்தேசிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இன்றி தெட்டத் தெளிவாக நடவடிக்கை மேற்கொண்டு, உதவித் தொகைகளை நூற்றுக்கு நூறு வீதம் உரிய கருத்திட்டத்திற்காக பயன்படுத்துதல் புதிய அரசின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலத்தி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .