Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளுக்குட்பட்ட கிணறுகளுக்கு மேலே வலை போடுமாறு, மினுவாங்கொடை பொது சுகாதாரப் பரிசோதகர்களினால், மக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .
மினுவாங்கொடை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிணறுகளைப் பரீட்சித்துப் பார்த்தபோது, அவற்றில் அதிகமான இடங்களில் டெங்குக் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதினாலேயே, கிணறுகளை வலை போட்டு மூடிப் பாவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இப் பிரதேச கிணறுகளில் டெங்குக் குடம்பிகள் இருப்பதாக அடையாளங்காணப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சில வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago