Princiya Dixci / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக் கம்பன்கழகத்தினால் இவ்வாண்டுக் கம்பன் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர் நினைவு திருக்குறள் மனனப் போட்டிகள், இம்மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமையும், அமரர் துரை விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப்போட்டி மற்றும் அமரர் பொன்.பாலசுந்தரம் நினைவுக் கவிதைப்போட்டி என்பன பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளன.
மேற்குறிப்பிட்ட திகதிகளில் தினமும் காலை 9.00 மணிக்குப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் பத்திரிகைகள் மூலம் முன்னரே கோரப்பட்டிருந்தன.
விண்ணப்பித்த போட்டியாளர்களுக்கான அனுமதியட்டைகள், போட்டியாளர்களின் முகவரிகளுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள், அவ்வனுமதி அட்டைகளுடன் போட்டி நடைபெறும் மண்டபத்துக்குச் சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போட்டிகளுக்கு விண்ணப்பித்தோர், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடினும் தக்க சான்றுகளுடன் நேரடியாகப் போட்டி மண்டபத்துக்கு வருகை தரலாம் எனக் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.
பேச்சு மற்றும் கவிதைப் போட்டிக்கான தலைப்புகள் இலக்கியம், கலை மற்றும் வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும் எனவும், திருக்குறள் மனனப் போட்டியாளர்க்கு அவசியமான அதிகாரத் தலைப்புகள் அனுமதி அட்டையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கல பதக்கப் பரிசில்கள் வழங்கப்படும் எனவும் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago