2025 மே 07, புதன்கிழமை

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

சர்வதேச மீனவர் தினமான இன்றைய தினம், (நவம்பர் 21) கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்கொழும்பு ஜன அவபோதய கேந்திர நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது.

துறைமுக நகர அபிவிருத்தித் திட்ட மக்கள் எதிர்ப்பு இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

துறைமுக நகர அபிவிருத்தித் திட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சரத் இத்தமல்கொட தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், அகில இலங்கை மீனவச் சங்கத் தலைவரும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்ட மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான அருண சாந்த, சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுதத் அத்தபத்து, உறுப்பினர் சுபாஷினி, சஜீவ சாமிர உட்பட மேலும் பலர் அங்கு விளக்கமளித்தனர்.

"நாட்டை நாசமாக்கும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை நிறுத்த வேண்டும்", என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X