2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்ணம்

பாணந்துறை கடற்கரை பகுதிக்கு அண்மித்த கடலில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த கடற்படை  வீரர்கள் வழங்கிய  தகவலின் அடிப்படையில்,  கடலில்  மிதந்து கொண்டிருந்த  நிலையில்,  பெண் ஒருவரின் சடலத்தை நேற்று (24) பிற்பகல்,  பாணந்துறை தெற்கு பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலிருந்து,  பணம் அற்ற வெற்று பணப்பை, முதியோர் அடையாள அட்டை  மற்றும் பெண்கள் அணியும் ஒரு ஜோடி காலணிகளை என்பவற்றை  பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை,  பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X