2025 நவம்பர் 19, புதன்கிழமை

கம்பஹா மாவட்ட உணவகங்கள் சோதனை

Editorial   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றின் சுகாதாரத் தரத்தைச் சோதனை செய்வதற்கான நடவடிக்கையை,  மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்டக் காரியாலயம், தற்போது முன்னெடுத்துள்ளது.

இந்நடவடிக்கையின் முதற் கட்டமாக மாவட்டத்திலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் என்பன,  மாவட்ட மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமென, அலுவலகப் பணிப்பாளர் நாயகத்தால், பதிவுத் தபால்  மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களில் உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் சுகாதாரத் தன்மை,  உணவு தயாரிப்பின் பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீர் பிரதான வடிகான்களில் தேங்கியிருத்தல் போன்றவை  தொடர்பாக  முக்கிய கவனத்துக்கு எடுத்த பின்னரே, மத்திய சுகாதார அதிகாரசபையின் நிறுவன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X