Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவிக்குக் கொடுப்பதற்காக, வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள கடையொன்றில் பால் பக்கெற்றை வாங்கிய நபரொருவர், குறித்த பால் பக்கெற்றில் புழுக்கள் இருந்தாக நீர்கொழும்பு பொது சுகாதாரப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை (21) குறித்த கடைக்குச் சென்ற நீர்கொழும்பு பொது சுகாதாரப் பிரிவினர் அந்தக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பால் பக்கெற்றுக்கள் சிலவற்றைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் முறைப்பாட்டாளர், தனது கர்ப்பிணி மனைவியை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் குழந்தைப் பேற்றுக்காக அனுமதித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள கடையொன்றில் 5 பால் பக்கெற்றுக்களை மனைவிக்கு வாங்கி கொடுத்து விட்டு தொழிலுக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது மனைவி, அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பால் பக்கெற்றை உடைத்து அருந்தும் போது, அதில் புழுக்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த அவர, பால் பக்கற்றுக்களை எடுத்துக்கொண்டு அவற்றை வாங்கி கடைக்குச் சென்று பாத்திரம் ஒன்றில் மனைவி அருந்திய பால் பக்கற்றை உடைத்து ஊற்றியுள்ளதோடு, அதனை வீடியோ செய்துள்ளார்.
அந்த பால் பக்கெற்றில் புழுக்கள் இருப்பதைக் கடைகாரரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், ஒரு பால் பக்கெற்றையும் உடைத்து ஊற்றியபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன. பின்னர் கடையில் விற்பனைக்கு வைக்கப்படிருந்த பால் பக்கெற் ஒன்றை உடைத்துப் பார்த்தபோது, அதிலும் புழுக்கள் இருந்துள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவுக்கு அறிவித்ததையடுத்து இன்றைய தினம் குறித்த கடைக்கு வந்த பொது சுகாதாரப் பிரிவினர், பால் பக்கெற்றுக்கள் சிலவற்றை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago