2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கற்றால் மட்டுமே வறுமை ஒழியும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்றாகவும் கடினமாகவும் கல்வி கற்பதன் மூலமே வறுமையை இல்லாதொழிக்க முடியும் என்று சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பிரிவில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு, 'சிப்டோரா' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், புதன்கிழமை (27) நடைபெற்றுது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

235 மாணவர்களுடன் 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தில் இம்முறை 10,000 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். இவர்களில் சகல மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 1,400 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 1,000 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X