Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை, எதிர்வரும் 6ஆம் திகதி மீளத் திறக்க வாய்ப்புள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 17ஆம் திகதி, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கலைப்பீடத்தைத் தற்காலிகமாக மூட, பல்கலைக்கழக நிர்வாகிகள் தீர்மானித்தனர்.
இந்நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட மாணவர்கள் சமரசம் செய்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெவிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பெரும்பாலும் எதிர்வரும் 6ஆம் திகதி கலைப்பீடத்தை மீளத் திறக்க வாய்ப்புள்ளதாகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முரண்பாட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
51 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
6 hours ago
22 Dec 2025